குக்கிங் பிடிக்கலையாம்.. கிளாமர்தான் வேணுமாம்.. இப்படி இருக்காங்களே.. அலுத்துக் கொள்ளும் இலக்கியா

Sep 11, 2024,06:22 PM IST

சென்னை:   நான் சமையல் செய்யும் வீடியோக்களைப் பார்த்து பலர் ஏன் இப்பெல்லாம் கிளாமர் காட்ட மாட்டேங்கறீங்க என்று கேட்கிறார்கள். இதைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுப்பாக உள்ளது என்று  கவர்ச்சி நடிகை இலக்கியா விரக்தி வெளியிட்டுள்ளார்.


நடிகை இலக்கியாவின் இன்ஸ்டாகிராம் ஒரு காலத்தில் அனல் பறக்கக் காணப்பட்டது. காரணம் அவர் தினசரி போட்டு வந்த கவர்ச்சிகரமான வீடியோக்கள்தான். மிக மிக கவர்ச்சிகரமான வீடியோக்கள் அவை என்பதால் பெரும் ரசிகர் கூட்டம் காலையிலிருந்தே காத்திருக்கும்.




எல்லோருக்கும் முன்பு அந்த வீடியோக்களை ஓபன் பண்ணவே முடியாது. அந்த அளவுக்கு இருக்கும். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவ்வளவு கவர்ச்சி காட்ட வேண்டுமா.. இது மோசமா இருக்கே என்றெல்லாம் கூட பலர் விமர்சித்தார்கள். ஆனால் அதையெல்லாம் இலக்கியா கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இப்போது தடாலடியாக டிராக் மாறி விட்டார். அதாவது கவர்ச்சியை நிறுத்தி விட்டு கையில் கரண்டியை எடுத்து விட்டார். அதாங்க.. குக்கிங் வீடியோக்கள் போட்டு கலக்கி வருகிறார்.


முன்பு இன்ஸ்டாகிராமில் அனல் பறக்க கிளாமர் காட்டி வந்த அவர் இப்போது யூடியூபில் வியர்க்க விறுவிறுக்க சமையல் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார். எப்படி நடந்தது இந்த மாற்றம் என்று இலக்கியாவைப் பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அதை விட ஆச்சரியமாக பலரும் இலக்கியாவின் இந்த திடீர் மாற்றத்தை பாராட்டவும் செய்கிறார்கள். இப்பத்தான் சூப்பரா இருக்கும்மா.. எவ்வளவு நல்லாருக்கு பார்க்கவே.. இதை விட்டு கண்டமேனிக்கு கவர்ச்சியா அலைஞ்சீங்களே என்று பலர் செல்லமாக அவரிடம் கோபித்துக் கொள்கிறார்களாம்.


ஆனாலும் பல ரசிகர்களுக்கு இலக்கியாவின் கவர்ச்சி திடீரென நின்று போனது வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறதாம். ஏன் கவர்ச்சியை நிறுத்திட்டீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இது குறித்து ஒரு பேட்டியின்போது இலக்கியா கூறுகையில், ஏன் கிளாமர் போட மாட்டேங்கறீங்க அப்படின்னு நிறையப் பேர் கேட்கிறார்கள். இதைக் கேட்டு கேட்டு அலுத்துப்  போச்சு எனக்கு.




முன்னாடி நான் கிளாமர் வீடியோக்கள் போட்டபோது, அப்பா கூட என்னைத் திட்டினார். இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுன்னாரு. நான் கேட்கலை. இப்போ நானே மாறிட்டேன். வித்தியாசமா இருக்கட்டுமேன்னு குக்கிங் வீடியோஸ் போடறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. எனக்கே மகிழ்ச்சியா, வித்தியாசமா இருக்கு.


நான் நல்லா சமைப்பேன். பிரியாணி சூப்பராக வைப்பேன்.. டேஸ்ட்டியாவும் இருக்கும். நான் வீடியோவில் செய்யும் எல்லாமே நானாக சமைப்பதுதான்.. அதை பலர் பாராட்டி ரசிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியுள்ளார் இலக்கியா. சமீப காலம் வரை விதம் விதமாக கவர்ச்சி காட்டி வந்த இலக்கியா இப்போது விதம் விதமான சமையல் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்திருப்பது வித்தியாசமாகத்தான் இருக்கிறது.. ஆனால் நல்லாருக்கு.


நல்ல விஷயம்தானே.. பாராட்டலாம் நாமும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்