சென்னை: கடந்த 5 வருடமாக கண்ணாடி உடையும் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், நேற்று புதிய விமான முனையத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் என்றாலே,, கண்ணாடியெல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுமே அதானே என்று கிண்டல், கேலி செய்யும்ள அளவுக்கு ஒரு காலத்தில் மோசமான நிலை இருந்தது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் உடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு கண்ணாடி உடையும். அப்படி இருந்தது நிலைமை. கடந்த ஐந்து வருடமாகத்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்தார். இதனால் விமான நிலையம் சர்வதேச அளவில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.
இந்த முனையத்தின் 14வது நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் அதிகாரிகள் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இங்கு நேற்று 7அடி உயர கண்ணாடி கதவின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடைந்த கண்ணாடி அப்படியே இருந்தது, சிதறல்கள் கீழே விழவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கர சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கியதால் ஊழியர்கள், பணியாளர்கள் ,உணவு வழங்குவோர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி விழுந்து உடைந்தது பற்றி விசாரணை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}