விஜய்யின் 'தி கோட்' படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?.. போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்

Aug 30, 2024,06:27 PM IST

சென்னை: விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்  சென்னை ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக ரூ.390க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் முனுமுனுக்கின்றனர்.


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற தி கோட் படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக ஏஜிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது. இப்படத்திற்கான டிக்கெட் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கியும், முன்பதிவு செய்தும் வருகின்றனர்.




இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு  இயக்கியுள்ள  இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வெங்கட் பிரபு, அஜித் சார்  ட்ரைலர் பார்த்துட்டு மெசேஜ் செய்தார்.  அதில் ட்ரைலர் நல்லா இருக்கு. விஜய்க்கும் டீம்க்கும் வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடு என்று கூறியிருந்தார். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் படம் குறித்த எதிர் பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுக்கும் ஒவ்வொரு போட்டியிலும் படம் குறித்து சுவாரஸ்யமாக கூறி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டுள்ளார்.


இந்நிலையில், தி கோட் படத்தின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்துள்ளது. இப்படத்தின் டிக்கெட் விலை ரூ.390க்கு ரோகினி திரையரங்கமே அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்துள்ளது. இது ஜாஸ்தியா இருக்கே என்று பலரும் முனுமுனுக்கின்றனர். ஆனால் பிளாக்கில் இதை விட பயங்கரமாக விற்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்