சென்னை: இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னணி நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியு திரையரங்கம் கடந்த 40 வருடமாக இயங்கி வந்தது. இது கடந்த ஆண்டு முதல் குட்லக் ஸ்டூடியோஸ் எனும் பெயரில் இயங்கி வருகிறது. குட்லக் ஸ்டூடியோவை கடந்த வருடம் நடிகர் சூர்யா மற்றும் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரியும் அவரது மனைவி ப்ரீதா ஹரியும் இணைந்து இதை நடத்தி வருகின்றனர். டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்டதாக குட்லக் ஸ்டுடியோ மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார்.அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் 'ரத்னம்' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.

பிரியா பவானிஷங்கர் இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 26 அன்று 'ரத்னம்' திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் திரைப்படம் உருவாகியுள்ளதாக ஹரி தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}