டெல்லி: இங்கிலாந்துக்கு விளையாடத்தான் வந்துள்ளோம். இந்த நேரத்தில் குடும்பத்தினரும் கூடவே இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியாக இருக்காது. குடும்பம் முக்கியம்தான். அதேசமயம், வந்துள்ள நோக்கம் அதை விட முக்கியமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, ஒன்றை இழந்துள்ளது. தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்பத்தினர் உடன் செல்வது தொடர்பாக பிசிசிஐ புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

அதன்படி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால போட்டிகளில், குடும்பத்தினர் 14 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த பிசிசிஐ உத்தரவை முன்னாள் கேப்டன் விராட் கோலி கடுமையாக விமர்சித்திருந்தார். புதிய விதியை தான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது கம்பீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், குடும்பத்தினர் முக்கியம், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். இது விடுமுறை அல்ல. நீங்கள் ஒரு மிகப்பெரிய நோக்கத்திற்காக இங்கு வந்துள்ளீர்கள். இந்த அணியில் அல்லது இந்த சுற்றுப்பயணத்தில் மிகக் குறைவான நபர்களே நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
குடும்பங்கள் எங்களுடன் வருவதை நான் எதிர்க்கவில்லை. குடும்பத்தினர் இருப்பது முக்கியம், ஆனால் உங்கள் கவனம் நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கும், வேறு எந்த விஷயத்தையும் விட உங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது என்பதற்கும், நீங்கள் அந்த இலக்கிற்கு, அந்த நோக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், மற்ற அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் கம்பீர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}