Happy Father's day: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

Jun 21, 2026,11:23 AM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி

 

தந்தை...


தவமின்றி கிடைத்த வரம்!


நம் நல்வாழ்வுக்குக்

காரணம் 

அவர் தம் கரம்!


நம் வாழ்வை

வசந்தமாக்கிய 

நல்உரம்!


குடும்பத்தைத் 

தூக்கி நிறுத்திய 

தூண்!


நமக்கு குவலயம் 

காட்டிய கோன்!




அருளை அள்ளி வழங்கிய 

அவன் ஓர் ஆலயம்!


அக்கறையுடன் அறிவுரை 

புகட்டிய 

ஆரம்பப்பள்ளி ஆசான்!


ஏகாந்தமாய் நாம் வாழ 

ஏற்றிவிட்ட ஏணி!


தடம் மாறும் தருணங்களில் 

கண்டித்து 

கரை 

சேர்த்த தோணி!


தன்னலம் கருதாமல் 

தன்பிள்ளை நலன் போற்றும்

எந்தை ஒரு ஞானி!


தெய்வம் என்பதைத் தெரிவிக்காமல்

நம்முடனே உறைந்தது

அவன் தனி பாணி!


தந்தை சொல்லே அருமந்திரம் 


அதுவே நம் திருமந்திரம் 


தந்தை என்னும் கோவிலில் 

நன்றி என்னும் தீபத்தை நாள்தோறும் ஏற்றுவோம்!

 

எந்தை நுந்தை புகழ் என்றென்றும் போற்றுவோம்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

news

Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்