சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பரவலாக அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்ப சலன தாக்கத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தென் தமிழ்நாட்டின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் நாளை ஜூன் இரண்டாம் தேதி திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தர்மபுரி திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று நிலவும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்யும். வட தமிழ்நாட்டில் மக்களை வாட்டி எடுத்த வெப்ப அலை இன்றுடன் முடிவுக்கு வரும். இப்போது பெய்யும் மழை தொடக்கம்தான். மிகப் பெரிய அளவிலான மழைக்கு நாளைக்கு வாய்ப்புள்ளது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}