சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தத நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீச கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். அப்போது வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். இது தவிர தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அலை வீசும். உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹுட் வரை வெயில் கொளுத்தும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 43.8 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 43.4, திருப்பத்தூரில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வேலூரில் 42.1, மதுரை விமான நிலையத்தில் 41.6, திருச்சி விமான நிலையம், திருத்தணியில் தலா 41.7, சேலம் மற்றும் பாளையங்கோட்டையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவானது.
7, 8ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 7ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். 8ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
9ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான 3 நாட்களிலும் அதிகபட்ச வெப்ப நிலையானது 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}