கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு

Sep 23, 2025,11:02 AM IST

கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. 


விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.


கொல்கத்தாவில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்தனர். நேதாஜி நகரில் ஒருவர் உயிரிழந்தார். மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.




தெற்கு வங்காள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன. கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று நள்ளிரவு முதல் கொல்கத்தாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது. 


வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. பூர்பா மெதின்பூர், பாஸ்சிம் மெதின்பூர், தெற்கு 24 பர்காணா, ஜார்கிரம், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மேலும் மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.


கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே கொல்கத்தா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஷாஹித் குதிராம், மெய்தான் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். விரைவில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு

news

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை

news

Gold rate.. தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.. பெரும் கவலையில் பெண்களைப் பெற்றோர்!

news

அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்.. அதுதான் அவருக்கு நல்லது.. ராஜேந்திர பாலாஜி

news

மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

news

கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?

news

நவராத்திரி 2ம் நாள் வழிபாடு .. இன்று என்ன கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்!

news

நவராத்திரி திருவிழா.. பராசக்திக்கான 9 நாட்கள்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து ரசிப்பது சிவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்