அடடா மழைடா.. தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கன மழைக்கு வாய்ப்பு தெரியுமா..?

May 20, 2025,10:14 AM IST

சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு நிலவி  வருவதால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் குளுமையான சூழல் நிலவுகிறது. குறிப்பாக நேற்று ஓசூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கனமழை வெளுத்து வாங்கியது.


 இந்த நிலையில் ஏற்கனவே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ள நிலையில், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை அதாவது 21ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக கூடும்.இதன் காரணமாக 22 ஆம் தேதி வாக்கில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக கூடும்‌.பிறகு அது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 


இன்று கனமழை: 




 கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


மிக கனமழை: 


நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அங்கு  12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மிதமான மழை: 


வடதமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.



சென்னை மழை: 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்