வருது.. மழை.. கன மழை.. இன்று முதல் 4 நாட்கள் வரை!

Sep 06, 2023,03:35 PM IST
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப்டம்பர்6 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒட்டிய பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி உள்ள நீலகிரி, தேனி ,திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்டம்பர்7) தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் . திருநல்வேலி ,நீலகிரி, தேனி ,திண்டுக்கல் மற்றும் தென்காசி போன்ற ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

(08.09.2023) முதல் (10.09.2023) வரை தமிழ்நாடு ,காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில  பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

வீதியும் கடலாகும்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 08, 2025... இன்று மாற்றங்கள் தேடி வரப் போகும் ராசிகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்