கொட்டும் மழை.. நனைந்தபடி பள்ளி வந்த பிள்ளைகள்.. பாவப்பட்ட செங்கல்பட்டு மாணவர்கள்!

Nov 30, 2023,08:39 AM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. ஆனால் தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தவிர மற்ற நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை காலையிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிப் பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படாத காரணத்தால் காலையிலிருந்து கொட்டும் கன மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல செங்கல்பட்டிலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கும் சேர்த்தே விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர். நேற்று இரவு,  முதலில் விடுமுறை விடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் சில நிமிடங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியானது. தற்போது  மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால் பார்ப்போர் பரிதாபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்