சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரமடைந்ததால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் போட்டி போட்டு பொருட்களை வாங்க கடைகளில் குவிந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே மாநகரமே ஸ்தம்பித்தது. இதன் எதிரொலியால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது .இதனால் மக்கள் கரண்ட் இல்லாமல், தண்ணீர் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட மக்கள் இந்த முறையும் இது போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என சூப்பர் மார்க்கெட் மற்றும் மார்க்கெட் களில் போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க செல்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறி சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் போட்டி போட்டு கொண்டு காய்கறிகளை வாங்க சென்றதால் சில மணி நேரத்திலேயே காய்கறிகள் விற்று தீர்ந்தது. கனமழை காரணமாக மக்களின் தேவை அதிகரித்ததாலும், கடைகளில் போதுமான இருப்பு இல்லாததாலும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அத்யாவசிய பொருட்களை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பிரட், பிஸ்கட் போன்ற பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பதால் தற்போது பற்றாக்குறையால் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
அதேபோல் கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 80க்கு விற்கப்பட்ட நிலையில், 40 ரூபாய் அதிகரித்து இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய்130 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை எதிரொலியாக வெங்காயத்தின் வரத்து குறைந்தால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}