சென்னை: சென்னையில் நடந்த உடல் பருமன் குறைப்பு அறுவைச் சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
சென்னை அடுத்த பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் பருமன் காரணமாக புதுவையைச் சேர்ந்த ஐ.டி. பொறியாளர் ஹேமச்சந்திரன் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இந்நிலையில் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொழுப்பு நீக்க முடிவு செய்யப்பட்டது. 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு கடந்த 22ம் தேதி அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி 15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன்படி ஹேமச்சந்திரன் சிகிச்சை பெற்ற வந்த சென்னை பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. டாக்டர்களிடமும் ஆலோசனை நடத்தியது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}