சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
என்னும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும் போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அடியே....நீ!
From Shyness to Speaking: How Puppetry Improved My Student's English
ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஆசிரியர் அளித்த அற்புதம்!
Short Story by N Deepalakshmi: நிலக்கடலை அக்கா
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம்.. இன்று தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
{{comments.comment}}