சென்னை: தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராக இருந்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
10 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பி. அமுதா இடமாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை ஓய்வு நாளன்று சஸ்பெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமுதா. இதையடுத்து கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காவல்துறையின் பெயர் இதில் பெருமளவில் டேமேஜ் ஆனது. இதையடுத்து சென்னை போலீஸ் ஆணையர், கூடுதல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது காவல்துறையைக் கவனித்து வரும் உள்துறையின் செயலாளராக இருந்து வந்த அமுதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் குட்புக்கில் இருந்து வந்தவர் அமுதா ஐஏஎஸ். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்குகளின் போது கூடவே இருந்து எல்லாப் பணிகளையும் கவனித்துக் கொண்டவர். இதன் மூலம் முதல்வரின் நன்மதிப்பையும் பெற்றவர். தற்போது அவர் சக்தி வாய்ந்த உள்துறைப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற இடமாற்ற விவரம்:
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். என்.எம். சங்கர ராவ், ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜயராணி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலச்சந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக ஹர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக ராஜாராமன் நியமனம்
புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள்:
புதுக்கோட்டை - அருணா, ராணிப்பேட்டை - சந்திர கலா, அரியலூர் - ரத்தினசாமி, நீலகிரி - லட்சுமி பாவ்யா தனீரு, தஞ்சாவூர் - பிரியங்கா, நாகப்பட்டனம் - பி.ஆகாஷ், கடலூர் - சிபி ஆதித்யா செந்தில் குமார், கன்னியாகுமரி - அழகு மீனா, பெரம்பலூர் - கிரேஸ் லயிரின்டிகி பேசாவு, ராமநாதபுரம் - சிம்ரஞ்சித் சிங் கெலான்,
கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி அறிவிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}