நொய்டா: வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு, சிக்கன் பிரியாணி டெலிவரி செய்தப்பட்டதாக கண்ணீருடன் பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் சாயா சர்மா.இவர் சமீபத்தில் லக்னோயி கபாப் பரோட்டா ஹோட்டலில் ஸ்விக்கி ஆப் மூலம் வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது . இது தெரியாமல் பிரியாணி பார்சலை திறந்து சாப்பிட்ட பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அது வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சாயா சர்மா கண்ணீருடன் மல்க, நான் ஒரு முழுமையான சைவப்பெண். நவராத்திரியின் போது ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணியை வேண்டுமென்றே டெலிவரி செய்து இருக்கிறார்கள் என சோசியல் மீடியாவில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலானது.
இதனை அறிந்த போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெஜ் பிரியாணிக்கு பதிலாக நான்வெஜ் பிரியாணியை டெலிவரி செய்த ஊழியர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்1
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!
எனக்கு ஏன் பெரியாரைப் பிடித்தது?
என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!
My Companion: The Moon
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}