கண்ணாடியில்.. தூசி நிறைய இருக்கா.. அதை இப்படித் தொடச்சா.. எப்படி மாறும் தெரியுமா!

Jan 06, 2026,12:18 PM IST

- ஷீலா ராஜன்


வீடா இது ஒரே குப்பையா இருக்கு.. அப்படின்னு புலம்பாதவர்களே இருக்க முடியாது. என்னங்க பண்றது.. இருக்கிற வேலை பிசியில், வீட்டை தினசரி சரியாக வைத்துக் கொள்வது இயலாத காரியமாக உள்ளது. வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கு ஆகும் செலவுக்கு நாமே பார்த்து விடலாம் போல என்ற மலைப்புதான் வருகிறது.


சரி செவ்வாய்க்கிழமையும் அதுவுமாக டென்ஷன் ஆக வேண்டாம் (அப்படீன்னா புதன்கிழமை ஆகலாமா என்று கேட்காதீர்கள்).. ஈஸியான சில டிப்ஸ் தருகிறோம். பாலோ பண்ணிப் பாருங்கள்.




ஸ்மார்ட் இல்லத்தரசிகளுக்கான 'சூப்பர் 5' டிப்ஸ் இதோ!


கண்ணாடி ஜொலிக்க - பழைய செய்தித்தாள்களை (Newspaper) லேசாக நனைத்து கண்ணாடியைத் துடைத்துப் பாருங்கள்... உங்கள் முகம் முன்பை விட 'பளிச்சோ பளிச்' எனத் தெரியும்!


வண்டு, புழுக்களுக்கு 'நோ': அரிசி மற்றும் பருப்பு வைத்துள்ள டப்பாக்களில் சிறிது வசம்பு அல்லது காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். இனி வண்டு, புழுக்கள் தொல்லை இருக்கவே இருக்காது! 


பிரிட்ஜ் துர்நாற்றம் 'பை.. பை':  பிரிட்ஜைத் திறந்தாலே ஒருவித வாடை வருகிறதா? கவலை வேண்டாம்! ஒரு பாதி எலுமிச்சம் பழத்தை பிரிட்ஜின் ஓரத்தில் வைத்துவிடுங்கள், துர்நாற்றம் ஓடிவிடும். 


வாடாத ரோசாப்பூ: பூ வைக்கும் பாத்திரத்தின் அடியில் சிறிது அரிசியைப் போட்டு, அதன் மேல் டிஷ்யூ பேப்பரை விரித்து பூக்களை வையுங்கள். பல நாட்களுக்கு பூக்கள் செடியில் பறித்தது போலவே 'பிரஷ்ஷோ பிரஷ்' ஆக இருக்கும்! தலையில் வச்சுட்டுப் போகும்போது ஊரே உங்களைத்தாங்க பார்க்கும்..வாசமாவும் இருக்கும்!


பட்ஜெட் கொசு விரட்டி: விலை உயர்ந்த கொசு விரட்டிகளுக்குப் பதில், காலி பாட்டிலில் வேப்பெண்ணெய் மற்றும் கற்பூரத்தூள் கலந்து பயன்படுத்துங்கள். கொசுக்களும் வராது, உங்கள் பணமும் மிச்சமாகும்! ஆனால் கற்பூரத் தூள் வாசனை சிலருக்கு வீசிங் பிரச்சினையைக் கிளப்பும்.. எனவே எதுவாக இருந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனையையும் கேட்டுக் கொள்வது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்