சமைப்பதை விட சமைத்த பிறகு அடுக்களையை சுத்தம் செய்வதும், பாத்திரங்களை விளக்குவதும்தான் மிகப் பெரிய வேலை. ஆனாலும் உங்களது சமையலறையை சுத்தமா வச்சுக்க சில எளிமையான டிப்ஸ் இருக்கு.. உங்க எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்தான்.. இருந்தாலும் புதிதாக கிச்சனுக்குள் புழங்க ஆரம்பித்திருக்கும் சிஸ்டர்ஸுக்கு இது யூஸ் ஆகும்.
எப்போதுமே சமைச்சு முடிச்ச உடனேயே சுத்தம் பண்ணுங்க.. அடுப்பு மேல சிந்தி இருக்கிறத உடனே துடைச்சிடுங்க. அப்போ அப்போ பாத்திரங்களை கழுவி வச்சிடுங்க.
சமையல் மேடையை துடைங்க.. சாப்பாடு செஞ்சதுக்கப்புறம் ஈரத்துணியால சமையல் மேடையை நல்லா துடைங்க.
குப்பைத் தொட்டியை தினசரி காலி பண்ணிடுங்க.. தினமும் இல்லாட்டியும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குப்பைத் தொட்டியை காலி பண்ணிடுங்க. அப்போதுதான் கரப்பான் பூச்சி உள்ளிட்டவை உள்ளே அண்டாமல் தடுக்க முடியும்.
அவ்வப்போது அடுப்பை நல்லா சுத்தம் பண்ணுங்க .. அடுப்பு மேல இருக்கிற கறைகள், எண்ணெய் பிசுக்கை எல்லாம் கிளீன் பண்ணுங்க.
சமையல் மேடையை டீப்பா கிளீன் பண்ணுங்க.. கிருமி நாசினி வச்சு சமையல் மேடையை நல்லா தொடைங்க. சிங்கையும் அதுல இருக்கிற அடைப்புகளையும் சுத்தம் பண்ணுங்க. பேக்கிங் சோடா, வினிகர் எல்லாம் யூஸ் பண்ணலாம். பாத்திரம் கழுவும் இடத்தை சுத்தம் பண்ணுங்க. அந்த இடத்துல அழுக்கு சேராம பாத்துக்கோங்க.
ஃபிரிட்ஜை மாதம் ஒரு முறை சுத்தம் பண்ணுங்க. ஃபிரிட்ஜை காலி பண்ணி உள்ளேயும் வெளியேயும் நல்லா தொடைங்க. கெட்டுப்போன சாமான்களை தூக்கிப் போட்டுடுங்க. மைக்ரோவேவை சுத்தம் பண்ணுங்க. உள்ள இருக்கிற கறைகளை நீக்குங்க. ஒரு கப்ல தண்ணி வச்சு மைக்ரோவேவ்ல கொஞ்ச நேரம் வச்சு எடுத்தா அழுக்கு ஈஸியா வரும்.
கப்போர்டுகளை தொடைங்க.. கபோர்டுகளோட வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் ஈரத்துணியால தொடைங்க.
சமையலறையில நல்ல காற்றோட்டம் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. ஜன்னல் இருந்தா திறந்து வைங்க இல்லன்னா எக்ஸாஸ்ட் ஃபேன் போடுங்க.
வினிகர் ஒரு நல்ல கிருமி நாசினி. தண்ணில கலந்து யூஸ் பண்ணலாம். பேக்கிங் சோடா கறைகளை நீக்க ரொம்ப உதவும். வினிகரோட கலந்து யூஸ் பண்ணா இன்னும் நல்லா இருக்கும்.
எலுமிச்சை சாறு கறைகளை நீக்கவும், நல்ல வாசனையை கொடுக்கவும் உதவும். சுத்தம் பண்ணுறதுக்கு ஒரே துணியை திரும்பத் திரும்ப யூஸ் பண்ணாதீங்க. மாத்தி மாத்தி யூஸ் பண்ணுங்க.
என்னங்க யூஸ்புல்லா இருந்துச்சா..?
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Healthy Food Habits: உணவு பழக்கமும் பழமொழியும் .. "உஷ்ணம் தவிர்க்க கம்மங் களி"
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
Yellow Alert: பெங்களூருவில் தொடரும் கன மழை.. இன்று 23 மாவட்டங்களில் மழை கொட்டும்!
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}