- ஸ்வர்ணலட்சுமி
முருங்கைக் கீரையில் என்ன பண்ணலாம்.. பொரியல் செய்யலாம், கூட்டு பண்ணலாம்.. பட் அதையே திரும்பத் திரும்பச் சாப்பிட்டு போர் அடிக்கிறதா?... கவலையை விடுங்க..சூப்பரான ருசியான துவையல் செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
இரும்புச்சத்து கால்சியம் விட்டமின்கள் நிறைந்த முருங்கைக் கீரை உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பல நன்மைகள் பயக்கும் முருங்கைக்கீரை துவையல் எப்படி? செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். கிச்சனுக்குள் போகலாம் வாங்க ஃபிரண்ட்ஸ்...
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்கீரை ஒரு கப் (நன்றாக கழுவியது )
2. கடலை பருப்பு 2 ஸ்பூன் 3. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்.
4. வர மிளகாய் 3( காரம் தேவைக்கு ஏற்ப).5. புளிஒரு பெரிய நெல்லி சைஸ்
6. நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன்
7. தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை.
8. சீரகம் ஒரு ஸ்பூன்.
9. கருவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு
10. உப்பு தேவைக்கு ஏற்ப.
11. தேங்காய் துருவல் 5 ஸ்பூன்
செய்முறை:
1. அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி கடலை பருப்பு உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.பிறகு 2.கழுவிய முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக வறுக்கவும்
3. வர மிளகாய்,புளி , சீரகம், சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய் துருவல், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்.
5. இந்த கலவை சூடு ஆறிய பிறகு உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும் .
6. இதனை ஒரு சர்விங்க் பவுலில் மாற்றவும்.
7. அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
8. இந்த சூடான தாளிப்பை முருங்கை கீரை துவையலில் சேர்க்கவும்.
9. சூடான குக்கர் சாதம், அல்லது வடித்த சாதம் சிறு தானியங்கள்- வரகு,சாமை, திணை சாதம் இதனுடன் சேர்த்து சிறிது நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.
பயன்கள்:
1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது முருங்கைக்கீரை. இந்தக் கீரையில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
2. மேலும் இரும்புச்சத்து, விட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
3. இதில் அதிக அளவு பைட்டோ நியூட்ரியன்ட்கள் இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. செரிமானத்தை மேம்படுத்துகிறது மேலும் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் அதிகம்.
5. முருங்கைக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
6. நீரிழிவு நோய்க்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் இந்த முருங்கைக்கீரை ஒன்றாகும்.இன்சுலின் உணர்த்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
7. இத்தனை பயனுள்ள முருங்கைக்கீரை ஏதோ ஒரு வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள வேண்டிய கீரை ஆகும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நடிகை நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி.. போலீஸ் தீவிர சோதனை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு
ஆன்மீக நாட்டம்.. அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்ட கலை.. கனவுகளுடன் கலக்கும் ராஜ் பிரணவ்!
Cooking Tips: முருங்கைக் கீரையில் துவையல் செய்து சாப்பிட்டுள்ளீர்களா.. அட சூப்பரா இருக்குமுங்க!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!
கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. பலியான சிறுவனின் தந்தை வழக்கு
உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் தங்கம் விலை.. அயர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினர்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 08, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
{{comments.comment}}