மன்னார்குடி ந. லட்சுமி.
திருவாதிரை அன்று சிவனுக்கு நெய்வேத்திய படைக்கப்படும் பிரசாதம்தான் திருவாதிரை களி. பிரசாதமாக படைப்பதற்கு களி எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறையை இப்போது நமக்கு விளக்குகிறார் மன்னார்குடி ந. லட்சுமி.
தேவையான பொருட்கள்:

1. பச்சரிசி – 1/4 படி(ஒரு டம்ளர் அளவு) ஒரு1/2 மணி நேரம் ஊறவைத்து உலர்த்திக்கொள்ள வேண்டும்.
2. பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
3. வெல்லம் – 3 / 4 கப்
4. தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
5. நெய் – 3 டேபிள் ஸ்பூன்
6. முந்திரி, திராட்சை, ஏலப்பொடி
7. (கடலைப்பருப்பு தேவை என்றால் ஊற வைத்து போட்டுக் கொள்ளலாம்)
செய்முறை:
1. பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
2. பிறகு அரிசியை நன்கு சிவக்க வறுக்கவும்.
3. பருப்பு, அரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது வேறு பாத்திரத்தை வைத்து 21/2( இரண்டரை கப்) டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
5. நன்கு கரைந்து வடிகட்டி, கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும்.
6. அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும். தண்ணீர் பத்தவில்லை என்றால் கொஞ்சமாக கொதிக்கும் சுடு தண்ணி ஊற்றிக் கொள்ளலாம்.
7. சிறிது நேரம் மூடி போட்டு வைத்து, இடை இடையே கிளறி விடவும்.
8. வெந்ததும் தேங்காய் துருவல்( சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்)
9. ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்கி வைத்ததும் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மூடி வைத்துவிடவும்.
புகைப்படம் உதவி: https://www.youtube.com/watch?v=826uGsxeC6w
(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தனிமை.. ஒரு வசீகரம்!
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
ஏன் கடவுளைப் புகழ்கிறோம்.. Why We Praise the Lord?
கேரள க்ரைம் ஸ்டோரி!
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
சிவனுக்கு நெய்வேத்யமாக செய்யப்படும் திருவாதிரை களி.. எப்படிச் செய்யணும் தெரியுமா?
அமைதியான புத்தாண்டுக் கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!
இனிய புத்தாண்டு 2026.. புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தயாரோவோம்!
Happy New year 2026: புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மக்கள் + காவல்துறையினர்!
{{comments.comment}}