சென்னை: ஹலோ தோழிகளே, வீட்டில் உள்ள பெண்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சே டென்ஷன் ஏறிடும்.. அதேசமயம், நாம என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும், வீட்டில் உள்ள ஆண்களுக்கு, அட ஹோட்டல்ல சாப்பிட்டது மாதிரி வருமா அப்படின்னு ஒரு அலுப்பு அலுத்துக்குவாங்க.. அதெல்லாம் ஒரு டிசைன்.. ஒன்னும் பண்ண முடியாதுங்க. வெரைட்டியாவும் கொடுக்கணும், டேஸ்டியாவும் இருக்கணும்னு நாம ரொம்பவே மெனக்கிட்டுதான் செய்றோம்.. ஆனாலும் என்னதான் வீட்ல சூப்பரா சமைச்சாலும் ஹோட்டலில் உள்ள டேஸ்ட் வராதுன்னு நினைக்கத்தான் செய்றாங்க.
நாமளும் அதே பொருட்கள் தான் யூஸ் பண்றோம். ஆனா அங்க மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்குன்னு தெரியலையேன்னு நம்மில் பலரும் யோசிப்போம்.. ஆனால் அதுல பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க.. நாமளும் வீட்டிலேயே ஹோட்டலில் தருவது போல சுவையான உணவை சமைக்கலாம். அப்படி இன்னைக்கு ஒரு உணவைத்தான் பார்க்கப் போறோம். அது வேற ஒன்னும் இல்லைங்க.. கமமக சாம்பார் தான்.
நிறைய பேருக்கு இட்லி, தோசை, பொங்கல் ஏன் வடைக்கு கூட சாம்பார் இல்லைன்னா சாப்பிடவே பிடிக்காது. ஹோட்டல் சாம்பாருக்காகவே இட்லி வாங்கி அதுல சாம்பார் ஊத்தி பாத்திகட்டி சாப்பிடற ஆளுங்க எல்லாம் நிறைய இருக்காங்க. அப்படிப்பட்ட டேஸ்டியான சாம்பாரை வீட்ல எப்படி செய்வது என்று பார்ப்போங்க!
ஹோட்டல் சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தனியா - மூணு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - எட்டு முதல் பத்து
கடலைப்பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு கப் (வேக வைத்தது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 3/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து - ஒரு ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10 முதல் 15
தக்காளி - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - சிறிதளவு (எலுமிச்சை அளவு)
துருவிய தேங்காய் - நாலு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முருங்கைக்காய் - 1
பரங்கிக்காய் - ஒரு கப் (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை: முதலில் துவரம் பருப்பை கழுவி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம் வரமிளகாய் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். பிறகு ஆறியபின் வறுத்த பொருட்களுடன் தேங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கிய பின் நறுக்கிய காய்கறிகளை போட்டு வேக விடவும். காய்கறிகள் முக்கால் பாதம் வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தபின் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்க வைத்து சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ரெடி ஆகிவிடும்.
இது இட்லி, தோசை, பொங்கல், சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் அவ்வளவுதாங்க! கமகமன்னு வாசத்தோடு இருக்கிற சாம்பாரை நீங்களும் உங்க வீட்ல செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் பண்ணிட்டு எனக்கு தேங்ஸ் சொல்ல மறக்காதீங்க!
வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு
திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!
ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!
மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
{{comments.comment}}