- ஸ்வர்ணலட்சுமி
Cluster beans என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொத்தவரங்காய் துவையல் ஈசியாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க ஃபிரண்ட்ஸ் கிச்சனுக்குள் போகலாம்...
தேவையான பொருட்கள்:
1. கொத்தவரங்காய்- 20
2. கடலை பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3. வர மிளகாய் மூன்று
4. இஞ்சி தோல் நீக்கி கழுவி கட் செய்தது ஒரு ஸ்பூன்
5. சீரகம் ஒரு ஸ்பூன்
6. பெரிய நெல்லிக்காய் ஒன்று (குறிப்பு: அதிகம் புளிப்பு சுவை தேவை எனில் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்)
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
7. தேங்காய் துருவல் மூன்று ஸ்பூன்
8. கருவேப்பிலை மல்லித்தழை கழுவி கட் செய்தது ஒரு கைப்பிடி அளவு
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
குறிப்பு :செக்கு நல்லெண்ணெயாக இருந்தால் நல்லது.
செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
2. பிறகு பொடியாக கட் செய்த கொத்தவரங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும் .அதனுடன் வரமிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். கட் செய்த இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்
3. அடுப்பு அணைத்த பிறகு பொடியாக கட் செய்த பெரிய நெல்லிக்காய் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறவும்
4. சூடு ஆறிய பிறகு இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
5. சூடான சாதம் இட்லி தோசை இவற்றிற்கு சைடிஷ் ஆக வைத்துக்கொள்ள மிகவும் அருமையான ஹெல்தியான துவையல்.
6. குழந்தைகள் காய் பொரியல் சாப்பிடுவதற்கு மாற்றாக இவ்வாறு செய்து கொடுத்து சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்தவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட அருமையான டேஸ்டான ஹெல்தியான கொத்தவரங்காய் துவையல் .வேலைக்கு செல்பவர்கள் ,பேச்சிலர்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் பேக் செய்ய ஈசியாக சட்டென செய்ய கூடிய அருமையான துவையல் .செய்து பார்த்து சுவைத்து பாருங்கள் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
{{comments.comment}}