- ஸ்வர்ணலட்சுமி
வெயில் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது இல்லைங்களா? நம் உடம்பில் சூட்டை தணிக்க கேரட் ஆனியன் தோசை அதற்கு சைட் டிஷ் ஆக மா இஞ்சி தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். வாங்க எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
தோசை மாவு ஒரு கப்
கேரட் 2 துருவிக் கொள்ளவும்
பெரிய வெங்காயம் 3 பொடியாக கட் செய்யவும்
பச்சை மிளகாய் ஒன்று பொடியாக கட் செய்யவும்
மல்லித்தழை கட் செய்தது ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் தேவைக்கு ஏற்ப
செய்முறை

தோசை கல் சூடானதும் தோசை மாவு ஊற்றி அதன் மேல் துருவிய கேரட் வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் லேசாக அதன் மேல் தூவிக் கொள்ளவும் சிறிது எண்ணெய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும் கேரட் தீஞ்சு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவையான கேரட் ஆனியன் தோசை ரெடி. அதற்கு சைடு டிஷ் மா இஞ்சி தேங்காய் சட்னி எப்படி ?செய்வது என்று பார்ப்போமா...
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு கப் ,பச்சை மிளகாய் 2 மல்லித்தழை கைப்பிடி அளவு உப்பு, அரை கப் பொட்டுக்கடலை ஒரு சிறிய துண்டு மா இஞ்சி தோலை சீவி கட் செய்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அருமையான சுவையான மனமனக்கும் மாஇஞ்சி தேங்காய் சட்னி ரெடி. இது ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். ஒருமுறை செய்து பாருங்களேன்.
மேலும் இதுபோன்ற சமையல் குறிப்புகளுக்கு இணைந்திடுங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
{{comments.comment}}