-ஸ்வர்ணலட்சுமி
ரோட்டு கடை தக்காளி தண்ணீர் சட்னி .. கேட்டதுமே சும்மா திகுதிகுன்னு நாக்கு ஊறும்.. அப்படி ஒரு டேஸ்ட்.. நல்லா வழிச்சு சாப்பிடத் தோணும்.. ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க வீட்ல. அப்படி ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் கொண்டது இந்த சட்னி.
சின்ன வெங்காயம், தக்காளி எல்லாம் போட்டுச் செய்யும் இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள் அல்லது எங்கேயாவது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் சட்டென்று செய்ய டேஸ்டியான, தக்காளி பிரியர்களுக்கு விருப்பமானதாகும்.. சரி.. தக்காளி தண்ணீர் சட்னி எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க... பிரண்ட்ஸ் ...கிச்சனுக்குள் போகலாம்....
தேவையான பொருட்கள்:

1. தக்காளி பழம்- 6
2. சின்ன வெங்காயம் 20 உரித்துக் கொள்ளவும்
3. பூண்டு ஆறு பல்
4 .சீரகம் ஒரு ஸ்பூன்
5. வரமிளகாய் 3 (தேவைக்கு ஏற்ப)
6. உப்பு தேவைக்கு ஏற்ப குறிப்பு :இந்து உப்பு பயன்படுத்தினால் நல்லது.
7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
8. கறிவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்* தாளிக்க: கடுகு +உளுத்தம் பருப்பு+ சீரகம் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
1. தக்காளி பழம் நன்றாக கழுவி கட் செய்து கொள்ளவும்.
2 .சின்ன வெங்காயம் பூண்டு உரித்து கழுவிக் கொள்ளவும்.
3. ஒரு குக்கரில் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு ,சீரகம், மஞ்சள் தூள் ,வர மிளகாய், உப்பு ,சிறிது கருவேப்பிலை சேர்த்து, உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும் .இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்.
4. குக்கர் பிரஷர் அடங்கியதும் இவை அனைத்தும் + மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்து சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் பல்ஸ் மோடில் போடவும் .
5. மிக்ஸியில் இருந்து ஒரு சாவின் பவுலுக்கு இந்த சட்னியை மாற்றவும். தக்காளி கருவேப்பிலை, மல்லித்தழை மணம் நன்றாக இருக்கிறதா?....
6. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
7. இந்த தாளிப்பை பவுலில் இருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
நல்ல கலர்ஃபுல்லான, டேஸ்ட்டான புளிப்பான, அருமையான ரோட்டு கடை தக்காளி தண்ணீர் சட்னி ரெடி... இட்லி தோசைக்கு மிகவும் அருமையான சைட் டிஷ் இருக்கும். இட்லி தோசை எக்ஸ்ட்ராவாக வாங்கி சாப்பிடுவார்கள்... தட்டில் வைத்த சூடான இட்லி, தோசை என்று காலியாகி விடும்.
மேலும் பேச்சுலர்ஸ்க்கு, புதிதாக திருமணம் திருமணம் செய்து தனிக்குடுத்தனம் வந்தவர்களுக்கு ஈசியாக இருக்கும் .நீங்களும் செய்து பாருங்கள்... தொடர்ந்து இணைந்திருங்கள் இது போன்ற ரெசிபிகளுக்கு தென்தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}