சார் சார் என் பொண்டாட்டிய காணோம் சார்.. அய்யோ அய்யோ.. சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே!

Sep 26, 2024,02:06 PM IST

சென்னை:   ஜோக்ஸ் படிச்சா மனசெல்லாம் லேசாகும்.. அப்படின்னு சொல்வாங்க. சரி பார்க்காலமேன்னு போனா டிபார்ட்மென்ட் டிபார்ட்மென்ட்டா பிரிச்சு வச்சு பிரிச்சு மேஞ்சிருக்காங்க நம்மாளுங்க.. சரி கணவன் மனைவி பத்தி ஏதாவது ஜோக்ஸ் தேறுதான்னு பார்த்தா.. அடேங்கப்பா.. எவ்வளவு!.. அதுல கொஞ்சம் உங்களுக்கும்..!


லன்ச் நேரம் வந்தாச்சு.. கரெக்ட்டான டைம்தான்.. மனைவி செஞ்ச சாப்பிட்டுட்டு கணவரும், கணவர் செஞ்சு கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு மனைவியுமாக ஆற அமர்ந்து படிங்க.. சண்டை போடாம படிக்கணும்.. அதான் முக்கியம்.. அப்பறம் மண்டை ஓடஞ்சா அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை!





சார் சார் என் பொண்டாட்டிய காணோம் சார்.


யோவ் இது போஸ்ட் ஆபீஸ்யா.. போலீஸ் ஸ்டேஷன் அந்தப் பக்கம் இருக்கு


அய்யோ அய்யோ.. சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே!


--


என் மனைவிக்கு கோபம் வந்தா அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருவாங்க


அச்சச்சோ நீங்க என்ன பண்ணுவீங்க அப்படி?


கோபம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிட்டே இருப்பேன்!




--


மகள்: வேர்க்க விறுவிறுக்க வேலை பண்ணிட்டிருக்காரே.. பாவம்ன்னு ஃபேன் போட்டு விட்டேன்.. அது தப்பா..  அதுக்கு போய் சண்டைக்கு வந்துட்டாரும்மா!


அம்மா: அடக் கொடுமையே. அப்படி என்ன வேலை பார்த்துட்டிருந்தாரு?


மகள்: ஃபேன் தொடச்சிட்டிருந்தாரு


--


டார்லிங்.. உனக்கு தீபாவளிக்கு என்ன வேணும் சுடிதாரா இல்லை சேலையா?


இதுல என்னங்க இருக்கு.. துவைக்கப் போறது நீங்க.. உங்களுக்கு எது ஈஸியா இருக்குமோ அதையே எடுத்துருங்க!


--


எதுக்குங்க அடிக்கடி என் மூஞ்சில தண்ணீர் ஸ்பிரே பண்ணி விடறீங்க


உங்க அப்பாதானே சொன்னார்.. என் மக பூ மாதிரின்னு.. அதான்!




--


குடும்ப நல ஆலோசகர்:  வாங்க என்ன பிரச்சினை உங்களுக்கு?


கணவர்: எங்களுக்குள்ள அடிக்கடி கருத்து வேறுபாடு வருது டாக்டர்


ஆலோசகர்: உதாரணத்துக்கு ஒன்னு சொல்லுங்க


மனைவி: நான் காபி போட்டு போய் கொடுத்தா, அவர் அதை சுடு தண்ணின்னு சொல்றார்.. இது மாதிரி நிறைய வருது டாக்டர்!


--




மனைவி: இந்த மாசத்துல இருந்து குக்கை நிறுத்திட்டு நானே சமைக்கப் போறேன்.. ஆமா எனக்கு எவ்வளவு சம்பளம் அதுக்கு தருவீங்க?


கணவன்: சம்பளம் என்னடா செல்லம் பெரிய சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்ச பிறகு என்னோட மொத்த இன்சூரன்ஸ் பணமும் உனக்குத்தானே வரும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்