கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை செய்து கணவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்ப, மனைவியோ கள்ளக்காதலனுடன் ஆட்டம் போட்ட சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜி. இவரது கணவர் பெயர் ரெஜிலின் மனோ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஜிலின் மனோ குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரூ. 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அஜி, ஒருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், கள்ளக்காதலருடன் ஓடி விட்டதாக ரெஜிலின் மனோ பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது தான் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதினால் அந்த பணத்தை பெற்று தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெஜிலின் மனோவின் தாயார் ராஜம் கூறுகையில், என் மகன் வெளிநாட்டிற்கு போய் நான்கு வருடம் ஆகிறது. அவன் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு அனுப்பிய பணத்தை மருமகள் தகாத உறவு வைத்துள்ள நபருக்கு கொடுத்து வருகிறார்.
பிள்ளைகளையும் ஒழுங்காக பார்ப்பதில்லை. தனது 2 பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}