முசாபர்நகர், உத்தரப் பிரதேசம்: தனது மனைவியை தம்பி பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது தம்பி மீது கோபப்படுவதை விட்டு விட்டு, மனைவியைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார் அந்த நபர். அதை அந்த நபரின் தம்பியே வீடியோவிலும் பதிவு செய்ததுதான் அதை விட பெரிய அதிர்ச்சியாகும். இந்த கொலைகார வன்மக் கும்பலிடமிருந்து தப்பியுள்ளார் அப்பெண். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணன் தம்பி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.
ஏப்ரல் 2 அந்தப் பெண்ணை, கணவரின் தம்பி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது தம்பி இந்த அக்கிரமத்தை செய்துள்ளார். கணவர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரிடம் கூறி அழுதுள்ளார் அப்பெண். வழக்கமாக இது மாதிரி நடந்தால் தவறு செய்தவர்கள் மீதுதானே எல்லோருக்கும் கோபம் வரும்.. ஆனால் அந்த கணவரோ, மனைவியைப் பார்த்து, இதுக்கு மேலேயும் நீ என்னோட மனைவி கிடையாது. என்னோட தம்பி மனைவி நீ என்று கூறி அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
அடுத்த நாள் கணவரும் அவரது தம்பியும் ஒரு சேர அறைக்குள் நுழைந்துள்ளனர். தனது மனைவியை கணவர் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு கழுதைத நெரித்துக் கொல்ல முயற்சித்துள்ளார். அதைத் தம்பி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்தப் பெண் சிரமப்பட்டு போராடி அவர்களிடமிருந்து விடுபட்டு வெளியேறி தப்பியுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியதால் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன் தம்பி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அவர்களைத் தேடி வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}