ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கொடுமை.. வீட்டில் பிடித்த தீ பரவி.. 17 பேர் பலியான பரிதாபம்!

May 18, 2025,11:59 AM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சார்மினார் அருகே ஒரு வீட்டிலிருந்து கிளம்பிய பரவி அதில் சிக்கி 17 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சார்மினாருக்கு வெகு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீப்பிடித்து பரவியதாக தெரிய வந்துள்ளது.


பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தோர் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 




தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் கீழே உள்ள கடைக்கு மேலே இருந்த வீட்டில்தான் தங்கியிருந்தனர். அதிக அளவிலான நபர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ப்பலியும் அதிகமாக இருந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தீவிபத்தில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், காயமடைந்தோரை சந்தித்துப் பேசினேன். மிகவும் சோகமானது இது. யாரையும் இதில் குறை சொல்வதற்கு இல்லை. இருப்பினும் இதுபோன்ற குடியிருப்புகளில் பாதுகாப்பு குறித்து காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி, மின்சாரத்துறை ஆகியவை சற்று கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.


தீவிபத்து நடந்த பகுதி மிகவும் நெரிசலானது. நிறைய நகைக் கடைகள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தீவிபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியும் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Detox Drinks: உடல் எடையை வேகமாக குறைக்க காலை 9 மணிக்குள் குடிக்க வேண்டிய 5 பானங்கள்!

news

ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கொடுமை.. வீட்டில் பிடித்த தீ பரவி.. 17 பேர் பலியான பரிதாபம்!

news

India's Global Outreach: கனிமொழி குழு எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறது?.. வெளியானது Full list!

news

EOS-09 செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி தோல்வி.. இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஏவுதலில் பின்னடைவு

news

தர்பூசணி ஜூஸ் Vs கரும்புச்சாறு : வெயில் காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைக்க எது பெஸ்ட்?

news

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை.. உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல 7 எம்பி.,க்கள் அடங்கிய குழு!

news

மத்திய அரசு கேட்டது 4 பேர்.. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் இது.. கடைசியில் செலக்ட் ஆனது இவர்!

news

மாப்பிள்ளை, எப்போதுமே ஹீரோவாக இருங்க.. தரம் தாழ்ந்து விடாதீர்கள்.. ரவி மோகனுக்கு மாமியார் வேண்டுகோள்

news

தமிழகத்தில்.. இன்று முதல் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்