- சகோ. வினோத்குமார்
கோவா: கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்து நடித்து வருவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அவர் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் தான் நடிகராகவே இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ( Internationa Film Festival of India ) என்பது 1952 ஆம் ஆண்டு மும்பையில் முதல் முறையாக ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக 1961 ஆம் ஆண்டு இயக்குனர் சத்திய ஜித்ரே அவர்கள் தலைமையில் நடந்த விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதற்குப் பிறகு இந்த விழாவிற்கு சர்வதேச தரம் அளிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழா மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான விழாவான 56 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வருவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்போது வரை அவர் 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, நான் 50 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் பத்து வருடங்கள் கடந்தது போல் தான் உள்ளது. இன்னும் நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் நான் ரஜினிகாந்தாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை இந்த அளவுக்கு உயர்த்திய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மிக முக்கியமாக என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி" என உருக்கமாக பேசி உள்ளார்.
170 படங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நடித்து வரும் ரஜினிகாந்த் அவர்கள் 2000 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 2016 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயர்ந்த விருதாக கருதப்படும் 2019 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ச.கோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
{{comments.comment}}