18 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை.. பருவ மழை தீவிரமடைகிறது.. வானிலை மையம் தகவல்

Nov 15, 2024,04:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் இதனால்  இன்று 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, சேலம், நெல்லை ,நாமக்கல், மயிலாடுதுறை, சீர்காழி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லையில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 16, 17 ,18 ,21, ஆகிய நான்கு தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிலையாமை!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

news

மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக

news

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

எங்கே என் .. யாதுமானவன்?

news

விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!

news

தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!

news

தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்