தமிழ்நாட்டில்.. ஓரிரு இடங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை.. குடையுடன் போங்க!

Jul 01, 2024,10:56 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. மறுபுறம் புழுக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 


இந்த கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டம் பாடந்துறை, குச்சி முச்சிப் பகுதிகளில் நேற்று திடீரென காற்றாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  




தற்போது மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேலம், கிருஷ்ணகிரி, சீர்காழி ஆகிய மாவட்டங்களில் நேற்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து குளுமை நிலவி வருகிறது.


7 நாட்களுக்கு மழை இருக்கும்


இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 7 முதல் 11 சென்டிமீட்டர் அளவு வரை மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டுக்கு இன்று  மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


இது தவிர கர்நாடகாவில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். மேலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து வட மாநிலங்களிலும் பரவலாக கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்