சென்னை: ஃபெஞ்சல் புயல் ஒரு வழியாக முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து விட்ட நிலையில் பிற்பகல் 1 மணி வரைக்குமான காலகட்டத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது வானினிலை மையம்.
வங்கக் கடலில் மிரட்டிக் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் தற்போது முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து ஆழ்ந்த காற்றவுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி விட்டது. இதனால் படிப்படியாக மழை அளவு குறையக் கூடும். இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்குள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
சென்னை தொழில்முனைவோர் தி.ஸ்ரீரகுராமனுக்கு பிரைட் ஆப் தமிழ்நாடு விருது
காட்டுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கோவில் பிரம்மோற்சம்!
கருணையே உருவான சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
அவளுக்கென்று ஓர் ஆசை!
Short Story: நம்பிக்கையே நிம்மதி!
மீன்கொத்திப் பறவை!
{{comments.comment}}