- ஸ்வர்ணலட்சுமி
இந்திய சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15 ஆம் தேதி 20 25 வெள்ளிக்கிழமை நாம் அனைவரும் நம் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடவிருக்கிறோம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பாரதமாதா: "இந்திய தாய் "என்று அனைவராலும் போற்றப்படும் பாரத மாதா என்றும் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி இருப்பவர். பாரதமாதா என்பது இந்தியாவின் தேசிய அடையாளமாகவும், தேசபக்தியின் உருவமாகவும் இருக்கும் அன்னை ஒரு பெண் உருவமாக இந்தியாவை ஆளப்படுகிறது. பெரும்பாலும் காவி அல்லது மூவர்ண புடவை அணிந்த தேசிய கொடியை ஏந்திய பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். பாரதமாதா என்பது இந்தியாவை ஒரு தாயாக பாவிக்கும் ஒரு உருவம் ஆகும். இது நம் இந்திய தேசியத்தின் அடையாளமாகவும், தேசபக்தியின் சின்னமாகவும் கருதப்படுகிறது . வெள்ளை யரை விரட்டியெடுத்து கை விலங்குகளை உடைத்து எறிந்த நாள் தான் சுதந்திர தினம் .சுதந்திர காற்றை சுவாசிக்க பல வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
பாரதமாதா பற்றிய பல கருத்துக்கள் ஓவியங்கள் உள்ளன .அதில் அபாநீந்திரநாத் தாகூர் வரைந்த ஓவியம் மிகவும் பிரபலமானது . அவர் பாரத அன்னையை நான்கு கைகள் வைத்த உருவமாக வரைந்த ஓவியம் மிகவும் பிரசித்தமானது .இது பாரத மாதாவின் முதல் சித்திரமாக கருதப்படுகிறது .இந்த ஓவியம் தேசிய வாதத்தின் அடையாளமாக மாறியது. மற்றும் தாய் நாட்டின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தப்படும் ஒரு கருவியாக பயன்பட்டது. தேசிய வாதத்தை ஊக்குவிப்பதற்காக பாரதமாதா கோயில்கள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. ஹரிதுவாரில் உள்ள பாரத மாதா கோயில் மிகவும் குறிப்பிடத்தக்கது.
"பாரதமாதா" என்பது இந்தியாவின் தேசிய உருவகம் .இது ஒரு தாய் தெய்வமாக வணங்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் "பாரதமாதா "முக்கிய அடையாளமாக இருந்தது. பாரதமாதாவின் உருவகம் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குறிக்கிறது. இது இந்திய மக்களின் தேசிய உணர்வை வலுப்படுத்த உதவுகிறது .மேலும் இது இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளமாக கருதப்படுகிறது. பாரதமாதாவின் உருவகம் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியது .இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியை தூண்டும் ஒரு சின்னமாக மாறியது. "பாரதமாதா "ஒரு தெய்வமாக வணங்கப்படுகிறார் .பல கோயில்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்களில் அவரது உருவப்படம் உள்ளது. மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களிலும் பாரத மாதாவின் உருவப்படம் உள்ளது.
"பாரதமாதா" -தாயே நீ பல வண்ண வனப்பு கொண்டாய் !பல மொழிகள் பேசி நின்றாய்! அன்பே மதமாய் நீ கொண்டாய் !அகிம்சை வழியில் வென்றாய்! ஒற்றுமை உணர்வால் அனைவரையும் இணைத்தாய் !தாயே வாழிய வாழியவே!....
பாரதமாதா பற்றி மகாகவி பாரதியார் பல கவிதைகள் எழுதியுள்ளார் .வந்தே மாதரம் ,பாரத நாடு, பாரத தேசம் ,எங்கள் நாடு, ஜெயபாரதம், பாரதமாதா, எங்கள் தாய், வெறிகொண்ட தாய் ,பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, பாரத மாதா நவரத்தின மாலை ,பாரத தேவியின் திருத்தசாங்கம் ,தாயின் மணிக்கொடி பாரீர் என பல கவிதைகள் எழுதியுள்ளார்.
விடுதலைப் போராட்ட காலங்களில் "பாரதமாதா" என்ற உருவத்தை பயன்படுத்தி தாய்நாட்டின் மீதான அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தினார் மகாகவி பாரதியார். அவருடைய கவிதைகளில் பாரதமாதா வெறும் நிலப்பரப்பாக மட்டுமில்லாமல் ஒரு தாயாக ,ஒரு தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார் .இது மக்களிடையே தேசிய உணர்வை வலுப்படுத்தியது. பாரதியாரின் மிகவும் பிரபலமான சில கவிதைகள் யாதெனில்
வந்தே மாதரம்: இது பாரதமாதாவை வணங்கும் பாடலாக கருதப்படுகிறது.
பாரத மாதா நவரத்தின மாலை :இது பாரத மாதாவை ஒன்பது ரத்தினங்களால் ஆன மாலையாக உருவகித்து எழுதப்பட்ட பாடல் ஆகும்.
பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி : இந்த கவிதை பாரதமாதாவை எழுப்பும் பாடலாக அமைந்துள்ளது.
பாரத தேவியின் திருத்த சாங்கம் : இப்பாடல் பாரத தேவி 10 அவதாரங்களாக உருவகித்து எழுதப்பட்ட பாடல்.
தாயின் மணிக்கொடி பாரீர் :இது பாரத தேசத்தின் கொடியை போற்றும் பாடல்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாரதமாதா கவிதையின் சில வரிகள் : "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி ,"வாழ்க பாரத மணித்திரு நாடு ,"எங்கள் தாய் பாரத நாடு ,"எங்கள் பாரத தேசம்.
இந்தப் பாடல் விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், தேசப்பற்றை வளர்க்கும் உத்வேக கருவியாக அமைந்தது.
"வந்தே மாதரம்
வந்தே மாதரம் "
பாரத் மாதா கி ஜே!..
மேலும் தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!
செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}