டெல்லி: உலக உணவு வகைகளின் தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. TasteAtlas என்ற இணையதளம் இந்த பட்டியலை வெளியிட்டது. இதில் கிரீஸ் முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், மெக்சிகோ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
சரி விதம் விதமான உணவுப் பழக்க வழக்கம் கொண்ட நம்ம நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா.. இந்தியா 12வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசை எப்படி கணக்கிடப்பட்டது, என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
TasteAtlas உலகின் சிறந்த 100 உணவு வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரீஸ் 4.60 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி 4.59 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ 4.52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்திய உணவு வகைகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த பட்டியலில் இந்தியா 4.4 புள்ளிகளுடன் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பிரபலமான உணவுகளான ரொட்டி, நான், சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதில் சட்னி ஒரு உணவாக சேர்க்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சட்னி பொதுவாக ஒரு துணை உணவாகவே கருதப்படுகிறது. அதிலும் கெட்டி சட்னியை சாப்பிடாத தென்னகத்து வாய்களே இருக்க முடியாது.. அந்த அளவுக்க சட்னி நம்ம ஊரில் தவிர்க்க முடியாத ஒரு சூப்பர் சைட் டிஷ்!
இதுதவிர இந்தியாவில் சாப்பிட சிறந்த இடங்களாக சில உணவகங்களின் பெயர்களையும் TasteAtlas குறிப்பிட்டுள்ளது. Dum Pukht at ITC Maurya, Mavalli Tiffin Rooms, Tunday Kababi, Leopold Cafe, Shree Thaker Bhojanalay போன்ற உணவகங்கள் அதில் சில. இந்த லிஸ்ட் போட்டவங்க நம்ம ஊர் உணவகங்கள் பக்கம் வந்தது இல்லை போலும்!
இந்தப் பட்டியலில் நமக்கு பின்னால் அதாவது 13வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. பெரு (14), லெபனான் (26), தாய்லாந்து (28), ஈரான் (41) போன்ற நாடுகள் அதற்குப் பின்னால் வருகின்றன. இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. காரணம், ஈரானிய உணவு வகைகள் பிரபலமானவை. ஆனால் ஈரானை 41வது இடத்திற்குத் தள்ளியிருப்பது அரசியல் என்று பலர் விளாசியுள்ளனர். அமெரிக்க உணவு வகைகளை விட ஈரான் உணவு வகைகள் மிகவும் சிறந்தவை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த லிஸ்ட்டில் உள்ளதுதான் சிறந்தது என்று கிடையாது. இது இறுதியும் அல்ல.. ஒவ்வொரு ஊருக்கும் டாப் 10 உணவுகள், உணவகங்களை நம்ம நாட்டில் போடலாம். அந்த அளவுக்கு உணவுகளில் சிறந்தது இந்தியா. அந்த வகையில்தான் இந்த பட்டியலை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!
120 கிலோ எடையிலிருந்து ஸ்லிம் பாடிக்கு மாறிய விஜய் சேதுபதி மகன்.. காரணம் இதுதானாம்!
அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?
{{comments.comment}}