ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!

Sep 08, 2024,06:05 PM IST

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்,  ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றவுள்ளார். இதற்காக இந்த வார இறுதியில் அவர் ரஷ்யா செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது. 


ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் அந்த இரு நாடுகளுக்கும் இதுவரை வெற்றி தரவில்லை. மாறாக பெரும் இழப்பையே ஏற்படுத்தி வருகிறது. பல அப்பாவிகளின் உயிர்கள்தான் தேவையில்லாமல் பறி போயுள்ளன. இந்த நிலையில் இந்தப் போரை நிறுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா தீவிர அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த சமரச முயற்சியில் இறங்கியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி, முதலில்  ரஷ்யாவுக்குச் சென்றார். பின்னர் உக்ரைன் நாட்டுக்கும் போயிருந்தார். இதன் மூலம் சமரச முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருவது உறுதியானது. உக்ரைனுடனான போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக புடினும் கூட விளக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தப் பேச்சுக்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.




இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இந்த வார இறுதியில் மாஸ்கோ செல்லவுள்ளார். முக்கியப் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்கவுள்ளார். உக்ரைன் போய் விட்டு வந்த பிறகு ஆகஸ்ட் 27ம் தேதி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து தற்போது அஜீத் தோவலின் மாஸ்கோ பயணம் நடைபெறவுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.


இந்தியா தவிர சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் கூட ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இதுதவிர இத்தாலியும் கூட இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா, இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும். விரைவில் இந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்