பிசியோதெரப்பிஸ்ட்டுனா.. மசாஜ் பண்றவர்னு நினைச்சீங்களா..பெரிய கருப்பனையே மிரட்டிவிட்ட பிபிடி திவாகர்!

Oct 03, 2024,06:10 PM IST

சென்னை: பிசியோதெரப்பிஸ்ட் திவாகர்னா யாருக்குமே தெரியாது.. அதுவே ஓஓஓஓன்னு கோமாளித்தனமாக அழுது கொண்டே வித்தியாசமாக காமெடி செய்வாரே அவர்தான் என்று சொன்னால் பளிச்சென அத்தனை பேருக்கும்.. அப்படி பார்மாகியுள்ளார் இந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர்.


படிப்பு பிபிடி.. தொழில் பிசியோதெரப்பிஸ்ட்.. ஆனால் அதைத் தவிர அத்தனையும் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார் திவாகர். மதுரையைச் சேர்ந்தவர். இவரது முக பாவனைகளும் இவர் செய்யும் காமெடி சேட்டைகளும் கண்டிப்பாக சிரிப்பை வரவைக்காது.. மாறாக எரிச்சலைத்தான் தரும்.. ஆனாலும் இவர் ஏகபோகமாக பிரபலமாகி விட்டார் என்பது வரலாறு.. . தமிழ்நாட்டின் சமூக வலைதள வரலாற்றுப் புத்தகத்தில் இவருக்கும் சில பேப்பர்களை ஒதுக்கிக் கொடுத்து விட்டனர் நம்ம மக்கள்.




சமூக வலைதளங்கள் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த பர்பஸ் இப்போது இல்லை. மாறாக குண்டக்க மண்டக்க வீடியோ போட்டால் விரும்பிப் பார்க்கிறார்கள்.. அடுத்தவர்கள் குடும்பப் பிரச்சினை குறித்து பேசினால் விழுந்து  விழுந்து பார்க்கிறார்கள். காமாசோ வீடியோக்கள்தான் இன்று சீக்கிரம் பிக்கப் ஆகிறது. அந்த வகையில் பிக்கப் ஆகி பிரபலமானவர்தான் நம்ம திவாகர்.


சிவாஜி கணேசன் மாதிரி வசனம் பேசுவது, 3 படத்தில் வந்த தனுஷ் போல அழுது நடிப்பது என்று இவர் செய்யும் காமெடிகள் எல்லாமே கோமாளித்தனத்தின் உச்சம்தான்.. ஆனாலும் மக்கள் இவரது வீடியோக்களை ரசிக்கிறார்கள்.. பார்த்து சிரிக்கிறார்கள்.. இதில் என்ன கொடுமை என்றால் இவரை பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் கூட கூட்டிக் கொண்டு போய் பிரமோஷன் செய்தும் வருகிறார்கள். அதையும் இவர் செய்து கொண்டிருக்கிறார்.


இவரது வீடியோக்களைப் பாத்தால்.. அட்டடடடடா என்று கவுண்டமணி போல பற்களை நறநறவென கடிக்கத்தான் தோன்றுகிறது.. ஆனால் மறுபக்கம்.. நாலு பேரை சிரிக்க வைத்தால் எது செய்தாலும் தப்பில்லை என்று வேலு நாயக்கர் கமல்ஹாசன் பேசும் வசனம் வந்து மனசை ஆற வைத்து விடுகிறது.. இதனால் வருகிற கொலை வெறியும் நின்று விடுகிறது.. மொத்தத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காமெடியே அல்ல என்றும் நமக்குள் ஒரு வசனம் ஓடி மறைகிறது.




அதை விடுங்க.. லேட்டஸ்ட்டா தமிழ்நாடு அமைச்சர் பெரிய கருப்பனை மிரட்டி விட்டுள்ளார் நம்ம திவாகர்.. அப்படி என்ன செய்தார்.. பெரிய கருப்பனிடம் இவரைக் கூட்டிக் கொண்டு போய் சூப்பரா காமெடி செய்வார்ண்ணே என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். அவரும் அப்படியா சரி செஞ்சு காட்டுப்பா என்று எதார்த்தமாக கூற.. உடனே கையில் பெரிய சைஸ் தர்பூஸசனியை எடுத்துக் கடித்தடி தனது ஸ்டைல் போஸ் கொடுத்து மேட்டரை ஆரம்பித்துள்ளார் பெரிய கருப்பன்.. அவர் அப்பவே உஷாராகி எஸ்கேப் ஆகியிருக்கவேண்டும்.. ஆனால் ஜஸ்ட் மிஸ். இதனால் திவாகர் செய்த அத்தனையையும் நின்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டார்.


கட்டபொம்மன் வசனம் பேசுகிறார், சிவாஜி கணேசன் வசனம் பேசுகிறார்.. அந்நியன் பட வசனம் பேசுகிறார்.. இப்படியே அடுத்தடுத்து போட்டுத் தாக்கிக் கொண்டே போனார் திவாகர். எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்த பெரியகருப்பன், நான் கூட உங்களை சாதாரணமா நினைச்சுட்டேன்.. பெரிய ஆள்தாம்ப்பா நீ என்று கூறி விட்டு  கிளம்பிப் போயுள்ளார்.


இந்த வீடியோதான் இப்போடு படு சூடாக வலம் வருகிறது.. சூடு ஆறுவதற்குள் நீங்களும் போய்ப் பார்த்துட்டு வேலையை ஆரம்பிங்க.. வியாழக்கிழமை விசேஷமாக முடியும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்