International Men's day: பெண்கள் நாட்டின் கண்கள்.. ஆண்கள் வீட்டின் தூண்கள்!

Nov 19, 2025,01:20 PM IST

- வே. தங்கப்பிரியா


சென்னை: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி அன்று சர்வதேச ஆண்கள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.ஆண்கள் தங்களின் குடும்பம் மற்றும் சமூகத்திற்கு செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு டாக்டர்.ஜெரோம் தீலக்சிங் சர்வதேச ஆண்கள் தினத்தை தோற்றுவித்தார். இவர் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தன் தந்தையின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் நவம்பர் 19 ஐ ஆண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.


தொடக்க காலத்தில் கரீபியன் தீவுகளில் ஆதரவை பெற்ற ஆண்கள் தினம், இப்போது பிற நாடுகளின் ஆதரவுகளை பெற்று தற்போது சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையானவர்கள் என்ற வெளித்தோற்றம் கொண்டு சமூகத்தால் கணிக்கப்படுகிறார்கள்.இதனால் அவர்களின் உணர்வு பூர்வமான தேவைகள் மதிக்கப்படாமல் மறைக்கப்படுகிறது.




சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு போன்ற சூழல்களில் பெண்களின் பங்களிப்பை விட ஆண்களின் பங்களிப்பே அதிகம். ஆண்களை பெரும் தியாகிகள் என்றே சொல்லலாம். பெண்கள் தங்கள் வலிகளை யாரிடமாவது சொல்லியோ அல்லது கண்ணீர் மூலம் வெளிப்படுத்தி விடுவார்கள். ஆண்கள் வெளியே கண்ணீர் சிந்துவதில்லை. மாறாக இதயத்தில் தங்கள் வலிகளை சுமக்கிறார்கள். குடும்பத்துக்காக தன் கல்வியை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற ஆண்கள் தியாகிகள் தானே!


சிறு வயதில் இருக்கும் போது தான் ஆசைப்பட்டதை அவர்கள் பெரியவர்களானதும் வாங்கி கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறுவார்கள். ஆனால் குடும்ப பொறுப்புகள் என்று வரும்போது அவர்கள் ஆசைகள் கனவாக போய்விடுகிறது. குடும்பத்துக்காக தன் கனவுகளை விடுத்து சம்மந்தமே இல்லாத வேலைக்கு சென்று நம்மை காப்பாற்றும் ஆண்கள் தியாகிகள் தான்.தனக்காக அல்லாமல் பிறருக்காக வாழ்பவர்கள் ஆண்கள்.


உலகெங்கிலும் உள்ள ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான,ஆதரவான சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.


(வே.தங்கப்பிரியா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்