ஆமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் விராத் கோலி 43 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைய வைத்துள்ளது. அவர் சாதனை படைப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஐபிஎல் டி டுவென்டி 2025 பைனல் போட்டியில் இன்று பெங்களுரு - பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களுரு அணி அதிரடியாக ரன்களை குவித்த போதும், மற்றொரு புறம் விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது. இருந்தாலும் பெங்களுரு அணியின் விராத் கோலி நிதானமாக ஆடி வந்தார். இதனால் இன்றைய போட்டியில் அவர் வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராத் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். இதுவரை மொத்தமாக 8000க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் 2016ம் ஆண்டு நடைபெற்ற 973 ரன்களும், 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்களும் விராத் அடித்துள்ளார். இதுவரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 700 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

விராத் 2024ல் 741 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 614 ரன்கள் அடித்திருந்தார். இன்றைய பைனலில் 86 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராத் பெற்றிருப்பார். அவர் இன்று நிதானித்து ஆடியதால் சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பதனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 43 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். விராத் சாதனையை கை நழுவ விட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
{{comments.comment}}