டெஹரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீதான 83-வது கட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஏவுகணையில் இந்திய மக்களுக்கு நன்றி சொல்லி எழுதியுள்ளது ஈரான். இதனால் இந்திய மக்களிடையே பெரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது தங்களுக்கு ஆதரவாகவும் ஒருமைப்பாட்டுடனும் இருந்ததற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "இந்திய மக்களுக்கு நன்றி" (thank you people of India) என்ற வாசகம் அடங்கிய கையால் எழுதப்பட்ட குறிப்பைப் பகிர்ந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது ஆதரவு அளித்த ஸ்பெயின், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜெர்மனி நாட்டு மக்களுக்கு ஈரானின் விண்வெளிப் படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை அதிகாலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து 83-வது கட்டத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. அஷ்டோத் பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், குடியிருப்பில் உள்ள ராணுவ தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தகவல் பரிமாற்ற மையம் ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
அல்-தாப்ரா மற்றும் அல்-உடேரியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அலி அல்-சலேம் விமான தளத்தில் உள்ள ஆளில்லா விமானக் கிடங்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதற்றத்தைத் தணிக்க விரும்புவதாகவும், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்த ஈரான் 7 நாட்கள் அவகாசம் கேட்டதாகவும், அந்த அவகாசம் ஏப்ரல் 6 வரை (10 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இரு தரப்பிலும் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
Monday Motivation: மாயமான பண்புகள்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
மயங்காத தமிழ்!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
{{comments.comment}}