தமிழ் நிலத்திலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமித அறிவிப்பு

Jan 23, 2025,05:02 PM IST

 சென்னை: தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


இன்று முக்கிய முடிவு ஒன்றை வெளியிடப் போவதாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது பெரும் ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் தூண்டியிருந்தது. இந்த நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியின்போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:




முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று அறிவித்திருந்தேன். தமிழர்களின் தொன்மையை நிரூபிக்கும் அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதை அறிவிக்கிறேன்.


5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்டது. அககழ்வா்ய்வு மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற  கதிரியக்க காலக் கணக்கீடுகள், இரும்பின் காலத்தை கிமு 4000க்கு முன்பு கொண்டு சென்று விட்டது. தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். 


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், உலகின் தலை சிறந்த ஆய்கவகங்களுக்கு, தேசிய அளவில் புகழ் பெற்ற புனே பீர்பால் சஹானி நிறுவனம், அகமதாபாத் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா நிறுவனத்துக்கும் பகுப்பாய்வுக்கு அநுப்பி வைக்கப்பட்டது.  இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் தரப்பட்டுள்ளன.


இவற்றைக் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரி முடிவு கிடைத்தது. கதிரியக்க காலக் கணக்கீடுகள் அடிப்படையில் கிமு. 3345ம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அறிமுகமாகி விட்டது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் எல்லாம் உலக அளவில் இரும்பின் தொன்மை குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருபவர்கள். இந்த அறிஞர்கள் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளனர். புதிய கண்டுபிடிப்பு ஆய்வாளர்களுக்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,

news

அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!

news

பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

news

ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

news

தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!

news

வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

news

ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்