சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ஐபிஎல் தொடர்களில், தொடர்ந்து கடந்த 13 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவி வருவது ரசிகர்களை பெரும் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன. ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 67 ரன்களை குவித்தார். மறுபுறம் இஷான் கிஷான் ரன் மழையில் மிரட்டி 46 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இறுதியாக 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 287 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல் அணியில் சஞ்சு சாம்சன் 66 ரன்களை
எடுத்தார். விடாமல் கடைசி வரை போராடியது ராஜஸ்தான். ஆனால் கடைசியில், ஆறு விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதில் இஷான் கிஷன் முதல் சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில், பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர்.
திலக் வர்மா 31, தீபக் சாஹர் 28 ரன்களை எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவும் ரன் சேர்க்க தவறிவிட்டார். இறுதியாக மும்பை அணி
ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. பின்னர் சென்னை அணி சேசிங்கைத் தொடங்கிய நிலையில், ரச்சின் ரவீந்தரா அபாரமாக விளையாடி 65 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களையும் எடுத்திருந்தனர். இறுதியாக 19.1
ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய சிஎஸ்கே வீரர் நூர் அகமது ஆட்டநாயகன் முறையைப் தட்டிச் சென்றார்.
தொடரும் தோல்வி
ஐபிஎல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுதான் முதல் சரிவா என்றால் இல்லை. ஐபிஎல் தொடரில் கடந்த 13 வருடங்களாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது மும்பை அணி. 2014 ஆம் ஆண்டில் மட்டும் தான் மும்பை அணி சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணிக்கு அடுத்தடுத்த போட்டிகள் சவால்கள் நிறைந்தாக அமைந்துள்ளது. ஏனெனில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் அடுத்து சிறப்பாக விளையாடினால்தான் நல்லது.
அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணியில் புதிய நாயகனாக களம் இறங்கியுள்ள பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். 24 வயதான இவர் அண்டர் 14 மற்றும் அண்டர் 19 போட்டிகளில் கேரளா அணிக்காக அபாரமாக விளையாடியுள்ளார். இவரின் திறமையை அறிந்த மும்பை நிர்வாகம் 30 லட்சத்திற்கு எடுத்திருந்தது.
தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மும்பை வீரர் விக்னேஷ் புத்தூர். ருதுராஜ் கெய்க்வாட், சிவம் டூபே, தீபக் ஹூடா ஆகிய மூன்று முக்கிய தலைகளை சாய்த்து அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}