Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?

Mar 28, 2026,06:17 PM IST

டெஹரான்: ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா தனது அதிநவீன ஆயுதங்களை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது ஒரு முக்கியச் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் சுமார் 850 'டோமாஹாக்' ரக ஏவுகணைகளை அமெரிக்கா ஏவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இது கிட்டத்தட்ட அந்த நாட்டு ராணுவத்தின் ஒரு வருட உற்பத்தித் திறனாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வருடத்திற்கு கிட்டத்தட்ட 1000 டோமஹாக் ஏவுகணைகளை தயாரிக்கிறது அமெரிக்கா. அதை ஒரே மாதத்தில் அது தீர்த்துள்ளது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படலாம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


ஒரே மாதத்தில் 850-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதால், அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு ஆபத்தான நிலைக்கு போயுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதை ராணுவ வட்டாரத்தில் வின்செஸ்டர் நிலை என்று சொல்வார்கள். அதாவது ஆயுதங்கள் தீர்ந்து விட்டன என்று பொருள்.




ஒரு டோமாஹாக் ஏவுகணையைத் தயாரிக்க சுமார் 2 ஆண்டுகள் வரை ஆகுமாம். மேலும் அதன் விலை சுமார் 3.6 மில்லியன் டாலர்கள். ஆண்டுக்கு சில நூறு ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கும் சூழலில், இவ்வளவு வேகமாகக் கையிருப்பு குறைவது பென்டகன் அதிகாரிகளைப் பதற்றமடையச் செய்துள்ளது.


டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க இந்த ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தியது. அதேசமயம், ஈரான் படு புத்திசாலித்தனமாக செலவு குறைந்த டிரோன்களைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறது. அதை வைத்துத்தான் அமெரிக்கா, இஸ்ரேலின் அதி நவீன, விலை குறைவான ஏவுகணைகளையும், விமானங்களையும் அது சமாளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், இது குறித்துப் பேசிய பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,எந்த நேரத்திலும் எந்தப் பணியையும் முடிக்கத் தேவையான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என்று கூறி, தட்டுப்பாடு குறித்த செய்திகளை மறுத்துள்ளார். இருப்பினும், கள நிலவரப்படி ஏவுகணைகளின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து வருவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.


ஈரான் தரப்பில் இருந்தும் பதிலடித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தனது அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு திட்டமிடும் என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவுக்கே இந்த பற்றாக்குறை என்றால் இஸ்ரேலின் நிலை இதை விட மோசமாகவே இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்