இன்று தேசிய பறவைகள் தினம்...பறவைகளின் அருமை உணர்ந்து பாதுகாப்போம்

Jan 05, 2026,12:17 PM IST

- த.சுகந்தி,M.Sc,B.Ed


பறவைகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ முடியாது. மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படி சிறப்பு வாய்ந்த பறவைகளை போற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ம் தேதி தேசிய பறவைகள் தினம்  கொண்டாடப்படுகிறது. இது பறவைகளின் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு மற்றும் அழிந்து வரும் பறவை இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.இந்த தினம் முதன் முதலாக அமெரிக்காவில் 2002-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம் உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன.


 தமிழகத்தில் உள்ள சதுப்புநில காடுகள், மலைகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களில் பல வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காக வலசை போகும். இப்படி வலசை போகின்ற பறவை இனங்கள் குறைந்து வருகிறது. அரிய வகை பறவை இனங்கள் இயற்கை சீற்றம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள் உண்டு. விவசாயிகளோ பூச்சிகளை தடுக்க பூச்சி மருந்துகள் தெளிப்பதனால் பறவைகள் உணவு தேட சிரமப்படுகின்றன.



 

பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு,பொங்கல், தீபாவளி ,ஈர நில தினம் போன்ற நாட்களில்  பறவைகளின் கணக்கெடுப்பு நிகழ்வு நடைபெறும்.அந்த நிகழ்வுகளில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். நாம் பறவைகளை இப்படி கணக்கெடுப்பதால் எந்த பறவை இனங்களின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது என்பதையும்,எந்த பறவை இனங்கள் புதியதாக இங்கு வருகின்றன என்பதையயும்,சில பறவை இனங்கள் அதிகரித்து வருவதையும்  தெரிந்து கொள்ள முடிகிறது. மரம், செடி, கொடிகளை உண்டாக்குவதற்கு பறவைகளின் பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். நாங்கள் குடும்பத்துடன் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வில் கலந்து கொண்டோம் என்பதில் பெருமை அடைகிறோம்.


பறவைகளைப் பார்க்க செல்லும் போது நாம் சத்தமாக பேசக்கூடாது. மெதுவாக நடக்க வேண்டும். அடர்ந்த நிற உடைகளை அணிவது தவிர்க்க வேண்டும். பறவைகளின் பெயர்களை தெரிந்து கொள்வதற்கு நாம் முதலில் பறவைகளின் அளவு, நிறம், அவற்றின் ஒலியினையும் (Sound), பறவையின் அலகு மற்றும் கால்களை கவனிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த பறவைகளோடு தெரியாத பறவைகளின் நிறத்தையோ, அளவினையோ ஒப்பிட்டு பார்த்து Merlin app பயன்படுத்தியும் தெரிந்து கொள்ளலாம். நாம் பறவைகளை நன்கு கவனித்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு பறவைகளிலும்  அவற்றின் நிறம் மற்றும் அளவினைப் பொறுத்து பெயர்கள் மாறுபட்டு காணப்படுகிறது.




மீன்கொத்தியில் மூன்று வகைகள் உண்டு. கொக்கு,நாரைகள், கழுகுகள்,ஆந்தைகள், நீர் காகங்கள், குயில்கள்,கரிச்சான், சிட்டுக்குருவி போன்றவற்றிலும் பல வகைகளாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் சிறப்பு பெயர் உள்ளது. நாம் பறவைகளின் பெயர்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம். நீங்களும் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வில்   கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் அனைவரும் பறவைகளுக்கு தினமும் நீர் மற்றும் தானியங்களையோ அல்லது அரிசியோ வைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்