- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
இன்ஸ்பெக்டர் ரவி, கோடீஸ்வரர் திரு. ராகவனின் ஆடம்பர பங்களாவிற்கு விரைந்தார்.
ராகவனின் மனைவியின் விலைமதிப்பற்ற வைர நெக்லஸ் அவரது லாக்கரிலிருந்து திருடப்பட்டிருந்தது. கதவுகள், ஜன்னல்கள் என அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. இது ஒரு 'பூட்டிய அறை மர்மம்'
சமையல்காரன், தோட்டக்காரன், தனிச் செயலாளர் என அனைவரும் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டனர். யாரும் உள்ளே நுழையவில்லை என்று அவர்கள் சத்தியம் செய்தனர்.
ரவி கூர்மையாக லாக்கரை ஆய்வு செய்தார். அதை உடைக்கவில்லை, சாவியைப் பயன்படுத்தித் திறந்திருக்கிறார்கள். ஆனால், லாக்கரின் சாவி ராகவனின் கோட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது.

"யாராவது லாக்கர் சாவியைத் தொட்டீர்களா?" என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அனைவரும் மறுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ரவி யோசிக்கத் தொடங்கினார். லாக்கர் சாவி இல்லாமல் திறக்கப்பட்டிருக்க முடியாது. ராகவனின் கோட்டைக் கவனித்தபோது, அதன் பாக்கெட்டில் ஒரு காய்ந்து போன துளசி இலை ஒட்டியிருந்தது.
சமையல்காரனைக் கூப்பிட்டு, "ராகவன் ஐயாவுக்குத் துளசி டீ போடும் பழக்கம் உண்டா?" என்று ரவி கேட்டார். சமையல்காரன் "ஆமாம்" என்றான்.
"திருடன் வேறு யாருமல்ல, நீதான்" என்று இன்ஸ்பெக்டர் உறுதியோடு கூறினார்.
சமையக்காரன் திருட்டு முழி முழித்தான்.
"நீ டீ போட துளசி இலை பறித்து வந்த போது ,ராகவனின் கோட் பாக்கெட்டில் சாவி இருந்ததை பார்த்துள்ளாய். உடனே அதை கையோடு ராகவனின் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து, போலியான சாவி செய்துவிட்டு ,மீண்டும் அதை அந்த பாக்கெட்டிலேயே வைத்துள்ளாய். சந்தர்ப்பம் கிடைத்த போது லாக்கரை திறந்து திருடிவிட்டாய். அப்படி தானே" என அதட்டினார்.
சமையல்காரன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவனது தகரப் பெட்டியில் இருந்து வைர மாலையும், போலியாக உருவாக்கப்பட்ட மற்றொரு சாவியும் இருந்தது கண்டறியப்பட்டது.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}