சென்னை : திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவாரா? திமுக தலைமையிடம் மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை சீட்களை கேட்டு பெறுவீர்கள்? என திமுக கூட்டணி குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என சொல்லி அவர் கூறிய பதிலால் செய்தியாளர்கள் தற்போது குழம்பி போய் உள்ளார்.
வழக்கமாக கமல் கூறும் பதில்கள் புரியாததாகவும், கேள்விக்கே தொடர்பு இல்லாதது போல் இருக்கும் என்பது தான் பெரும்பாலானவர்கள் கருத்தாக உள்ளது. பல விஷயங்களில் அவர் கூறும் கருத்து பலருக்கும் கடைசி வரை புரியாது. அப்படி நினைத்தோ என்னவோ சமீப காலமாக கமலிடம் செய்தியாளர்கள் பெரிதாக கேள்விகள், குறிப்பாக அரசியல் சார்ந்த கேள்விகள் எதையும் அதிகம் எழுப்பாமல் இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி பற்றியும், திமுக கூட்டணி பற்றியும் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள்.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து விட்டு வந்தது பற்றி பல்வேறு கட்சி தலைவர்களிடமும் செய்தியாளர்கள் நேற்று முதல் கேள்டி எழுப்பி வருகிறார்கள். காலையில் இது பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கேட்ட போது, திமுக அரசை பாராட்டியதில் இருந்தே அவர் ஏற்கனவே திமுக பக்கம் வந்து விட்டார் என்பது தெளிவாகி உள்ளது என பளீச்சென பதில் சொல்லி விட்டு சென்றார். அதே போல் ஓபிஎஸ், திமுக கூட்டணிக்கு வருவது பற்றி கமலிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், அனைவரும் வருக தமிழகம் வெல்க என பதிலளித்தார். திமுக தலைமையிடம் மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை சீட்கள் கேட்டு பெறுவீர்கள் என கேட்டதற்கு, எத்தனை தொகுதிகள் என சொல்ல முடியாது. எப்படியும் நாங்கள் போட்டியிடுவோம். முக்கியமான விஷயம் கூட்டணியில் ஒற்றுமையும், நோக்கமும் தான். அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் நாங்கள் அதை நோக்கி நகர்கிறோம் என கமல் பதிலளித்துள்ளார். இதை கேட்ட செய்தியாளர்கள் பலரும் குழம்பி போய் விட்டர்.
வழக்கமாக எத்தனை சீட்கள் கேட்பீர்கள் என ஒரு கட்சி தலைரிடம் என கேட்டால் ஏதோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை சொல்லுவார்கள். அல்லது சமீபத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரி கட்சிகள் கூறியதை போல் நாங்கள் இரட்டை இலக்க எண்களை கேட்டுப் பெறுவோம் அதிகமான இடங்களை கேட்டுப் பெறுவோம் என பதில் அளிப்பார்கள். அதே போல் கமலும் ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்த்து சென்று செய்தியாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமின்றி குழப்பமும் சேர்ந்தே கிடைத்துள்ளது.
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}