நச்னு ஒரு நியூஸ்.. இயக்குநராகிறார் ஜேசன் சஞ்சய்!

Aug 28, 2023,02:59 PM IST
சென்னை: இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஜேசன் சஞ்சய். இவர் நடிகர் விஜய்யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் வழியில் அவரது பேரன் ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராகிறார் என்பதால் விஜய் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.



எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காலத்தில் புரட்சிகர இயக்குநராக வலம் வந்தவர். விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஏற்றம் கொடுத்தவர் எஸ்.ஏ.சி. ஏன் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தி தொடர்ந்து படங்கள் எடுத்துவர் எஸ்.ஏ.சி. அவரது படங்கள்தான் விஜய்யை சிறப்பாக வெளிச்சம் போட்டுக் காட்டின. பிறகு தான் வெளி இயக்குநர் படங்களுக்கு மாறினார் விஜய்.

நடிகர் விஜய்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தந்தை வழியில் நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விஜய்யுடன் இணைந்து சிறு வயதில் வேட்டைக்காரன் படத்தில் டான்ஸ் ஆடியிருப்பார். ஆனால் அவர் டக்கென இண்டிக்கேட்டரை மாற்றிப் போட்டு தாத்தா வழியில் இயக்குநராகி விட்டார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கப்போகும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய்தான் இயக்கவுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரனுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக லைக்கா வெளியிட்டுள்ளது. தற்போது இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்