- சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சித் தலைவர் பிரசாந்த் விடுத்துள்ள அறிவுரை அறிக்கை:

வடகிழக்கு பருவமழை 2025, "டிட்வா" புயல் காரணமாக 29.11.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு "ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மழை சேதம் தொடர்பான புகார்களை தெரிவிக்க: 1077 04151 228801 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதவிர பொதுமக்கள் மழைக்காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கலெக்டர் எம். எஸ். பிரசாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை
காய்ச்சி வடிகட்டிய நீரை பயன்படுத்தவும்.
சூடான உணவுகளை மட்டும் உண்ணவும்.
உடனடியாக தேவைப்படும் மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சூப், ரசம், பால், டீ, காபி போன்ற திரவ உணவுகளை அருந்தவும்
வீட்டின் மின்விளக்குகளை கவனமாக கையாளவும்.
உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பொதுமக்கள் மழைக்காலங்களில் செய்ய கூடாதவை
- பழச்சாறுகள் , ஐஸ்கிரீம், குளிர் குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்ணும் உணவுகளை தவிர்க்கவும்
- மின்மாற்றிகள், மின்கம்பிகள் , மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்
- மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும்
- இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, ஃபோன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்
- வீட்டு சுவரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் உடனே சரி செய்யவும்
- பச்சை மரங்களுக்கு இடையே நிற்க வேண்டாம்
- வீட்டுக்குள் மின்சார எரிவாயுவை அணைக்கவும்
- கதவுகளை ஜன்னல்களை மூடி வைக்கவும்
- பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்
- சேதமடைந்த கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம்
- அதிகாரபூர்வ அறிவிப்பு செய்திகள் மட்டுமே நம்பவும்
எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}