தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்

Feb 05, 2025,02:35 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


போராளி சுப்புவின்,

திடீர் மரண செய்தி...!!!


காட்டுத்தீயாய்...!!!

கந்துப்பட்டி முழுவதும்...

காற்றாக  பரவியது.


அனுதாப அலைகள் எங்கும்...!!!

ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...!!!


சுப்புவின் இளம்  மனைவிக்கு ...

கட்சித் தலைவர்களின் ஆறுதல்..!!!


சுப்புவின் குடும்பத்தை,

தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!

தலைவரின் அறிவிப்பு..!!!




சுப்புவின் சடலத்திற்கு ...

கட்சி தலைமையிடத்திலிருந்து...


ஆயிரம் மாலைகள்..!!!

அரசு மரியாதையுடன்...,

அடக்கம் செய்யப்பட்டது சடலம்..!!!


தத்தெடுத்த சுப்புவின் வீட்டிற்கு...

தலைவர்களின் அணிவகுப்பு..!!!


குடும்ப நலம் விசாரிக்க..!!!

குடும்பத்தின் தேவையினை அறிய...!!!


பிரம்மாண்டமாய்...!!! பத்திரிகைகளில் 

பாராட்டுக்கள்..!! இச்செய்தி குறித்து.


ஒரு மாதத்திற்குப் பின்,

ஒரு கோரிக்கை வைத்து ...!!!


உதவி கேட்டாள்  சுப்புவின் மனைவி .

உடனே நாளை வா...!! 

நல்லது சொல்கிறேன் என,

நவின்றார்...!!!கட்சியின் எம்எல்ஏ.


மறுநாள் சென்றாள்..!!

மாறுபட்டு பேசினார்..!!

 

இருப்புக் கொள்ளவில்லை.

இவளுக்கு...!!!


தனது கோரிக்கை குறித்து  ,

தாளாமல் அவசரப்பட்டாள்..!!


ஏன் அவசரப் படுற...???

கொஞ்சம் இரு ....!! என்று..

எட்டி கையைப் பிடித்தான்..!!

ஒரு நமட்டு சிரிப்புடன்..!!


சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!

சட்டென்று நினைவில் வந்தது..!!!


சுட்டாள் கண்களால்..!! 

சூடு தாங்காமல்....


மறுவாரம் மாலை..!!

மகிழ்வோடு  வரச்சொன்னான்..!!


கனத்த மனத்தோடு நடந்தாள்.

கணவரின் மரணமும்..!!!

கணவரின் சடலத்துக்கு கிடைத்த ...


மாலை மரியாதைகளும்..!!!

மனக்கண்முன் வந்து...

மனசு  கனத்தது..!!


ஆறாத மனதுடன்....

ஆற்றங் கரையில் ,

அமர்ந்திருக்கும்....


கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....

கால்கள் நடந்தன..!!


கல்லுப் பிள்ளையாரிடம் ,

கவலைகள் அனைத்தையும் கொட்டி ...

தன் மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,


தன்னம்பிக்கையுடன் ,

தைரியமாய் நடந்தாள் ..!!

தன் கோரிக்கையை வென்றெடுக்க..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

news

இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!

news

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு

news

உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

அதிகம் பார்க்கும் செய்திகள்