இந்தியாவின் மொத்தப் பிரச்சினைகளையும்.. அள்ளி எடுத்து கும்மியடித்த இந்தியன் 2.. Stunning Trailer!

Jun 25, 2024,07:31 PM IST

சென்னை: கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த சினிமாக் காதலர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியன் 2 டிரெய்லர் வந்து விட்டது. இந்தியாவின் மொத்தப் பிரச்சினைகளையும் அள்ளி எடுத்து, இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் கும்மியடித்து வெளுத்து விட்டிருக்கிறார்கள் என்று டிரெய்லர் உணர்த்துகிறது. இதுவே படம் குறித்த எதிர்பார்ப்புகளையும் வெகுவாக கிளறி விட்டுள்ளது.


கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக நடித்த அப்படத்தின் 2வது  பாகத்தைத்தான்  இப்போது வேறு வடிவில் உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். முதல் பாகத்தில் எது கதைக் களமோ அதுவேதான் இப்படத்திலும் கதைக் களமாக தோன்றுகிறது. அதேசமயம், கூடுதலாக சில பல பிரச்சினைகளையும் சேர்த்து கதையை வேற லெவலில் உருவாக்கியிருக்கிறார் ஷங்கர் என்பதையும் டிரெய்லர் சுட்டிக் காட்டுகிறது. சுருக்கமாக சொன்னால் இந்தியாவை கடந்த சில ஆண்டுகளில் சுழற்றியடித்த பல பிரச்சினைகளை, ஒன்று கூட மிஸ் ஆகாமல் எடுத்து கதையில் கோர்த்திருக்கிறார் ஷங்கர்.




வேலை வாய்ப்பு, லஞ்சம், ஊழல், பறிக்கப்பட்ட உரிமைகள் என எந்தப்பிரச்சினையையும் விட்டு வைத்தது போலத் தெரியவில்லை.  நாட்டு நடப்புகள் உள்பட மொத்தப் பிரச்சினைகளையும் வைத்து கமல்ஹாசன் மூலமாக ஒரு காட்டு காட்டியிருக்கிறார் ஷங்கர் என்று தெரிகிறது.


டிரெய்லரில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது கமல்ஹாசனின் கெட்டப்பைத்தான். ஆனால் அனைவரும் எதிர்பார்க்காதது, இந்தப் படத்தில் இந்தியன் தாத்தா, ஒரே கெட்டப்பில் வரவில்லை. விதம் விதமாக காட்சி தருகிறார். வட இந்தியராக வருகிறார்.. தென்னிந்திய தாத்தாவும் இருக்கிறார்.. வெளிநாட்டுக்காரர் போலவும் தெரிகிறார். தசாவதாரம் படத்தின் ஷங்கர் வெர்ஷன் போல படம் இருக்குமா என்று தெரியவில்லை.




ஆனால் கமல்ஹாசனை பல கெட்டப்களில் பார்த்து நமக்கும் பல காலமாகிறது என்பதால் நிச்சயம் இது ஒரு பெரும் விருந்தாக அமையும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. கமல்ஹாசனைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் படத்தில் நடிப்பு ராட்சசன் எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார். பாபி சிம்ஹா இருக்கிறார்.. சித்தார்த் இருக்கிறார். இவர்களின் விளையாட்டு எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது.. ஷங்கரின் கதைக்களம் எப்போதும் ஒன்றுதான்.. ஆனால் அவரது பிரசன்டேஷன்தான் வித்தியாசப்படும்.. இந்த முறையும் அது அருமையாக வந்திருப்பது போலவே தெரிகிறது. படத்தைப் பார்க்கும்போதுதான் முழு வீரியத்தையும் உணர முடியும்.. அதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக டிரெய்லர் வந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்